Thursday, January 27, 2011

எடுத்த அவதாரமோ ஒன்பதுடன் ஒன்று,
வேதத்துக்கு ஒரு மச்சம், மீட்டதும் அன்று,
விடத்தை விழுங்க ஒருவன், கடைய கூர்மம்,
பூவுலகம் காக்கும் வராஹமும், அவன் கர்மம்,
நரசிம்மன், சினத்துக்கு, ஒரு பாதி மிருகம்,
மூன்று அடி கேட்ட வாமனனும் மானிட வர்க்கம்,
தந்தை சொல் மந்திரத்துக்கு ஒரு பரசுராமன்,
அவனே மகன், கணவன், அரசன், ஒருத்திக்கே ராமன்,
கள்வனும் அவனே, காப்பவனும் அந்த கண்ணனே,
பலராமனும் ஒருவன், கண்ணனுக்கு அண்ணனே,
கல்கி அவன் பெயர், கலியுகத்திற்கு ஒன்றே முடிவு,
புதியதோர் உலகம் தழைக்க, அவனே தீர்வு !
தென்றல் வந்து போன சுவடா தெரியும் ?
அணைக்க வந்த அந்த நெருப்பா எரியும் ?
காதலியாகவே இருக்க அவள் ராதையும் அல்ல,
கட்டியவனே கடவுள் என்கிற சீதையும் அல்ல,
எல்லாம் தெரிந்து இருந்தும், கேட்க மாட்டாள்,
அத்தனை கோபம் இருந்தும் வெளி காட்டாள்,
உண்மையை சொல்ல மனமும் மறுக்கிறது,
சொல்ல கூடாதென்று உதடும் தடுக்கிறது ..
செய்த தவறுகளுக்கு...
போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே போகட்டும் கண்ணனுக்கே...

Wednesday, January 26, 2011

If all was for butter and bread,
If things were never the way as said,
If you believe to be the one for change,
If they make you stand at firing range,

If you can face the guns, straight up,
If you fill with confidence your life’s cup,
If you not fear rejections for today,
If you can stand up to all that they say,

If you can treat life and death, equal,
If you don’t make failures your sequel,
Yours is the earth, and what’s even more,
You will be the one to show them the Door!
Be a Man, My Son!
அடி மனத்திலும் ஆழமாய் பதிந்தாலும்
பகை கொண்டு மனம் எரிய நேர்ந்தாலும்
அவளால் எரிந்த மதுரை எரிந்தது தான்,
சினத்தால் அழிந்த நகரம் அழிந்தது தான்,
எரிய நேர்ந்தாலும் விளக்காய் இரு,
கரைய நேர்ந்தாலும் உப்பாய் இரு,
பிரிய நேர்ந்தாலும் உயிராய் இரு ,
சரிய நேர்ந்தாலும் கனி மரமாய் இரு,
உயிரை சில நாள் சுமக்கும் பொய்யான உடலே மெய் ..
உன் காட்சி முடியும் முன்னே முடிந்தது செய்
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே, போகட்டும் கண்ணனுக்கே ....

Friday, January 21, 2011

பேசாமலேயே இருக்க பெருமாளும் இல்லை,
நயமாக நல்லதை சொல்ல நக்கீரனும் இல்லை,
அரங்கேற்றமும் நாடகமும் இனிதே நடந்தது,
காலமும் கடவுளை போல அமைதியாய் கடந்தது,
நல்ல நண்பனுக்கும், தோழிக்கும் ஒன்றே விதி,
...உனக்கும் அவனுக்கும் மட்டுமே நடந்தது தெரியும்,
ஆண்டவனுக்கு மட்டுமே அத்தனையும் புரியும்,
சபை கலையட்டும்....
போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும்,
போகட்டும் கண்ணனுக்கே, போகட்டும் கண்ணனுக்கே ...