Wednesday, January 26, 2011

அடி மனத்திலும் ஆழமாய் பதிந்தாலும்
பகை கொண்டு மனம் எரிய நேர்ந்தாலும்
அவளால் எரிந்த மதுரை எரிந்தது தான்,
சினத்தால் அழிந்த நகரம் அழிந்தது தான்,
எரிய நேர்ந்தாலும் விளக்காய் இரு,
கரைய நேர்ந்தாலும் உப்பாய் இரு,
பிரிய நேர்ந்தாலும் உயிராய் இரு ,
சரிய நேர்ந்தாலும் கனி மரமாய் இரு,
உயிரை சில நாள் சுமக்கும் பொய்யான உடலே மெய் ..
உன் காட்சி முடியும் முன்னே முடிந்தது செய்
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே, போகட்டும் கண்ணனுக்கே ....

No comments:

Post a Comment