தென்றல் வந்து போன சுவடா தெரியும் ?
அணைக்க வந்த அந்த நெருப்பா எரியும் ?
காதலியாகவே இருக்க அவள் ராதையும் அல்ல,
கட்டியவனே கடவுள் என்கிற சீதையும் அல்ல,
எல்லாம் தெரிந்து இருந்தும், கேட்க மாட்டாள்,
அத்தனை கோபம் இருந்தும் வெளி காட்டாள்,
உண்மையை சொல்ல மனமும் மறுக்கிறது,
சொல்ல கூடாதென்று உதடும் தடுக்கிறது ..
செய்த தவறுகளுக்கு...
போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே போகட்டும் கண்ணனுக்கே...
No comments:
Post a Comment