எடுத்த அவதாரமோ ஒன்பதுடன் ஒன்று,
வேதத்துக்கு ஒரு மச்சம், மீட்டதும் அன்று,
விடத்தை விழுங்க ஒருவன், கடைய கூர்மம்,
பூவுலகம் காக்கும் வராஹமும், அவன் கர்மம்,
நரசிம்மன், சினத்துக்கு, ஒரு பாதி மிருகம்,
மூன்று அடி கேட்ட வாமனனும் மானிட வர்க்கம்,
தந்தை சொல் மந்திரத்துக்கு ஒரு பரசுராமன்,
அவனே மகன், கணவன், அரசன், ஒருத்திக்கே ராமன்,
கள்வனும் அவனே, காப்பவனும் அந்த கண்ணனே,
பலராமனும் ஒருவன், கண்ணனுக்கு அண்ணனே,
கல்கி அவன் பெயர், கலியுகத்திற்கு ஒன்றே முடிவு,
புதியதோர் உலகம் தழைக்க, அவனே தீர்வு !
No comments:
Post a Comment