Saturday, February 19, 2011

சின்ன உலகுத்துக்குள்ள நிறைய வம்பு,
பச்சோந்திக்கு வேணுமாம் காளை கொம்பு.
கொஞ்சம் காசுக்கு எவ்ளோ நெரிய ஆசை,
மேல இருக்கறவனுக்கு கூட இல்ல பூசை,
மனுஷனுக்கு நாய் பொழப்பு தானுங்க,
சுய மரியாதைக்கு, பஞ்சம் தானுங்க,
பொண்டாட்டி புள்ளைக்கு சொத்து சேக்க,
எல்லார் பேச்சையும் சும்மாவே கேக்க,
வேதனை எல்லாம் மறந்து போச்சு,
வெட்கமும் சேத்து பறந்து போச்சு..
ஆறடி குழில புதைக்கறதுக்கு முன்னாடி,
அப்பவும் புடிச்சு பாப்பன் வெட்டியான் உன் நாடி,
இங்க அது கூட இல்லீங்க, வேரோட
கொன்னுட்டு, வேர பொழப்பு பாப்பாங்க !

Thursday, February 17, 2011

சொன்னதெல்லாம் கேட்டாள்,
மின்மினியாய் சிரித்தாள்,
ஆசையாய் அணைத்தாள்,
அங்குலம் அங்குலமாய் முகர்ந்து,
அரவணைத்து உச்சி நுகர்ந்து,
மனம் நிறைய மகிழ்ந்து,
காதல் பெருகி வழிந்து,
உயிர், தொட்ட இடமெல்லாம்,
கரைந்தது உடலில் விடமெல்லாம்,
மனம் துயில் அனைத்தையும் தொலைத்தது
யாரங்கே, இவை அனைத்தையும் கலைத்தது...
அட, கனவா ?
காதலிக்க நேரம் இருந்தது அன்று,
அப்பொழுதோ வாழ்க்கை அறியா கன்று.
காத்திருக்க ஒருத்தி, காக்க வைக்க ஒருத்தி,
வெட்டிவிட ஒருத்தி, விளையாட ஒருத்தி,
வேண்டா வெறுப்பாக இன்னொருத்தி,
பொய் உரைத்த ஒருத்தி, பகலுக்கு ஒருத்தி,
மனதுக்கு ஒருத்தி அன்று இல்லை ,
அவனோ, தீராத விளையாட்டு பிள்ளை,
இன்று..... காலம் சந்தர்ப்பம் ஒன்றை தந்தது,
காலமே கேள்வி கேட்டு
காலமே பதிலும் தந்தது ...
இதையும் கடந்து போம்....

Thursday, February 10, 2011

நாடறிந்த வீரராம்,
நற்பண்பு மிக்க சூரராம்,
தர்மர் மூத்தவராம்,
வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன்
சக உதரராம்,
அன்னை சொல் கேட்டு, பெண்ணை
பங்கிடுவார்,
பகடை காய் ஆக்கி, சபையில் ஆடை
களைய கண்டிடுவார்,
அங்கு கணவனா கண் கண்ட கடவுள் ?
வந்தவன் உயிரையும் காத்தவன், கறுவுள்,
அவ மதிக்க பட்ட மங்கையோ
அழைத்தது அண்ணனை, அந்த கண்ணனை ...!
கொண்டவனாம் கோவலனை எண்ணி
பெற்றாளாம் பெண் பிள்ளை, மணிமேகலை
காதலனை பிரிந்த ஏக்கத்தில் கலை துறந்து
துறவறம் பூண்ட மாதவி இங்கிருக்க,
திரும்பியன் மடியில் சாய்ந்து அங்கிருக்க,
மகிழ்ந்த மங்கை, அவனை இழந்தால் களவுக்கு,
சிறு பெண் பிள்ளை ஒன்றே அந்த நிலவுக்கு...
எரித்தவளுக்கு எல்லா ஊரிலும் சிலம்புடன் சிலை,
பத்தினியான மாதவிக்கு ஒன்றுமே இல்லை !

Friday, February 4, 2011

தலைவனின் ஏக்கத்தை அறிந்த வெண்ணிலா,
கதிரவனை அணைக்க இயலாமல், போதும் உன் உலா,
இன்று போய் நாளை வா, இனிதே உந்தன் நிறைவு,
என்றது, கதிரவனுக்கோ தலைவியை காண நேரம் குறைவு,
கொண்டவன் பகலிலும், கொண்டவள் இரவிலும்,
சந்திக்கும் நேரமோ கடுகின் சிறியது,
வானுலக காதலனும் காதலியும் பிரிந்த பின்னே,
நிலத்தில் காதல் மலரும், நேரம் அது,
கொண்டவனை பிரிந்த ஏக்கத்தில் காதலி,
நிலத்தில் மலரும் காதலை எண்ணி ஏங்குகிறாள்,
காதலியின் பிரிவிலும் கடமை தவறாத காதலன்,
கட்டி அணைத்தால் மட்டும் தான் காதலா ?
அறியாமையில் உறங்கும் உலகம்,
எங்கும் அமைதி ...எதிலும் அமைதி ....!

Thursday, February 3, 2011

அத்தனை அழகா பௌர்ணமி நிலா ?
இத்தனை நாள் வானத்தை பார்த்தவனுக்கு
வெற்றிடம் மட்டுமே வெளிச்சம்,
ஏனோ அதை தாண்டி பார்க்க அச்சம்,
இதே நிலா நாளையும் இருக்குமா ?
இதே போல் என்னை பார்த்து சிரிக்குமா ?
இக்கணம் போல என்றும் சிலிர்க்குமா ?
எண்ணிய என் வாக்கும் பலிக்குமா ?
அத்தனை அழகா பௌர்ணமி நிலா ?
இத்தனை நாள் வானத்தை பார்த்தவனுக்கு,
வெற்றிடம் மறந்து,
வெண்ணிலவே இன்று விடியலானது ..!

Tuesday, February 1, 2011

Baba Black Sheep have you any fool ?
Yes sir, Yes Sir, three floors and full,
One for my project, one for my name,
One to do my work, one to play a game,
What do we do with all the really good one?
Call them, for appraisal; we’ll have some fun,
Boot Licking - An interim art of adopting morally unacceptable practises combined with realization by self, with greatest deterioration to self-respect, for reasons as faster growth, monetary benefits, career progression and suppression of guilt, which could lead to the evolution of phsically acceptable yet ethically dislikable human pattern by corporate organisms.
Smart Workers - A Term coined by a group of certified projected-to-be-Managers, to classify workers based on what THEY think about work and WHO communicated it FIRST, with least or no knowledge on it, and is strictly not based on what the work is, how it was accomplished and who performed it.