அத்தனை அழகா பௌர்ணமி நிலா ?
இத்தனை நாள் வானத்தை பார்த்தவனுக்கு
வெற்றிடம் மட்டுமே வெளிச்சம்,
ஏனோ அதை தாண்டி பார்க்க அச்சம்,
இதே நிலா நாளையும் இருக்குமா ?
இதே போல் என்னை பார்த்து சிரிக்குமா ?
இக்கணம் போல என்றும் சிலிர்க்குமா ?
எண்ணிய என் வாக்கும் பலிக்குமா ?
அத்தனை அழகா பௌர்ணமி நிலா ?
இத்தனை நாள் வானத்தை பார்த்தவனுக்கு,
வெற்றிடம் மறந்து,
வெண்ணிலவே இன்று விடியலானது ..!
No comments:
Post a Comment